பிற மாநிலங்களிலும் மதுவுக்கு எதிராக பிரச்சாரம் செய்ய தயார்: நிதிஷ் குமார்
பீகாரில் மதுவிலக்கு கொண்டு வரப்பட்டு அது வெற்றிபெற்றதாக கூறப்படும் நிலையில், பிற மாநிலங்கள் அழைத்தால், மதுவுக்கு எதிராக அங்கு சென்று பிரச்சாரம் செய்ய தயாராக இருப்பதாக பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார் தெரிவித்தார்.
பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய நிதிஷ் குமார் கூறியதாவது:-
"மதுவுக்கு எதிரான நிகழ்ச்சியில் பங்கேற்க எந்த குழுக்கள் அழைப்பு விடுத்தாலும் அங்கு சென்று மது விற்பனை மற்றும் மது நுகர்வுக்கு எதிராக பிரச்சாரம் செய்ய தயாராக உள்ளேன்" என்றார். அப்போது அவரிடம், மது விற்பனை செய்வதற்கும் குடிப்பதற்கும் நாடு முழுவதும் தடை கொண்டு வருவதை நீங்கள் விரும்புகீறிர்களா? என்று நிதிஷ் குமாரிடம் செய்தியாளர்கள் கேட்ட போது, இது நடந்தால் நான் மிக்க மகிழ்ச்சி அடைவேன்.
மதுபானத்துக்கு தடை விதிக்கப்பட்டதால், சமூக எழுந்துள்ள சமூக இயக்கம் மற்ற மாநிலங்களுக்கும் பரவி அவை ஒவ்வொன்றாக மதுவிலக்கு குறித்து சிந்திக்கத் தொடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
அருகில் உள்ள ஜார்கண்ட், உ.பி.மாநிலங்கள் பிகாரின் மதுவிலக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை, அவர்கள் ஒத்துழைக்க கடிதம் எழுதியதுதான் மிச்சம், அவர்கள் மேன்மேலும் எல்லைகளில் மதுக்கடைகளை திறப்பதில்தான் உற்சாகம் காட்டி வருகின்றனர். இந்த விஷயத்தில் அவர்கள் அளித்த ஒத்துழைப்பு மதுக்கடைகளை திறந்ததுதான்” என்றார்.