இந்தியா சசிபெருமாள் குடும்பத்தினருக்கு கடிதம் எழுதிய ராகுல் காந்தி: ரூ.5 லட்சம் வழங்கிய காங்கிரஸ்

சசிபெருமாள் குடும்பத்தினருக்கு கடிதம் எழுதிய ராகுல் காந்தி: ரூ.5 லட்சம் வழங்கிய காங்கிரஸ்

பதிவர்: நிர்வாகி, வகை: இந்தியா  
படம்

ஆக.12, 2015:- காந்தியவாதி சசிபெருமாள் குடும்பத்தினருக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி அளிப்பட்டுள்ளது.

மார்த்தாண்டம் அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி செல்போன் கோபுரத்தின் மீது ஏறி போராடிய போது சசிபெருமாள் உயிரிழந்தார்.

இவரது குடும்பத்தினருக்கு காங்கிரஸ்கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி இரங்கல் கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில், மாநிலத்தில் உள்ள மதுகடைகளுக்கு எதிராக போராட்டம் நடத்தியபோது சசி பெருமாளின் துரதிருஷ்டமாக மரணம் குறித்து ஆழ்ந்த துயருற்றேன்.

காந்தியவாதியான சசி பெருமாள் தன் வாழ்க்கை முழுவதையுமே மது கொடுமைகளுக்கு எதிராக போராடியவர். எந்த நோக்கத்துக்காக அவர் வாழ்ந்து மறைந்தாரோ அதை முழுமையான வகையில் எடுத்துக்கொண்ட உங்கள் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த துயரமான நேரத்தில் என் நினைவுகளும், பிரார்த்தனை களும் உங்களோடும், உங்கள் குடும்பத்தோடும் இருக்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், காங்கிரஸ் கட்சி சார்பில் சசிபெருமாள் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

உங்களது கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன!
தமிழ் / ஆங்கிலத்தில் எழுத இங்கே சொடுக்கவும் [CTRL+G]யை சொடுக்கியும் மாற்றி கொள்ளலாம்
CAPTCHA code
இந்த படத்தில் உள்ள எழுத்துக்களை உள்ளீடவும்